Paristamil Navigation Paristamil advert login

Carrières-sous-Poissy : சகோதரியின் காதலனுக்கு கத்திக்குத்து.. சகோதரன் கைது.!

Carrières-sous-Poissy : சகோதரியின் காதலனுக்கு கத்திக்குத்து.. சகோதரன் கைது.!

12 ஆனி 2024 புதன் 13:35 | பார்வைகள் : 7067


53 வயதுடைய ஆண் ஒருவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. 
அவரது சாவுக்கு காரணமக இருந்த  இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Carrières-sous-Poissy (Yvelines) நகரில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று ஜூன் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காவல்துறையினரை அழைத்துள்ளார். அப்பெண்ணின் காதலரான 53 வயதுடைய ஒருவரை அப்பெண்ணின் சகோதரன் (24 வயது இளைஞன்) கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அறை ஒன்றுக்குள் பதுங்கியிருந்த பெண்ணையும், அவரது காதலனையும் மீட்டனர். காதலன் கத்திக்குத்துக்கு இலக்காகி மயங்கி இருந்துள்ளார்.  

அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்