Paristamil Navigation Paristamil advert login

பரிசில் Trottinettesல் பயணிக்க தடை - இன்று முதல் புதிய சட்டம்

பரிசில் Trottinettesல் பயணிக்க தடை - இன்று முதல் புதிய சட்டம்

1 புரட்டாசி 2023 வெள்ளி 07:36 | பார்வைகள் : 9250


 கடந்த ஏப்ரல் மாதம் பரிசில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் படி, தலைநகரில் இன்றுமுதல் மின்சார ஸ்கூட்டர்களில் (Trottinettes) பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பரிசில் கிட்டத்தட்ட 15,000 மின்சார ஸ்கூட்டர்கள் வாடகைக்கு விடப்பட்டு வந்தநிலையில், அனைத்து சேவைகளும் நேற்று ஓகஸ்ட் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்குவந்துள்ளது. பரிசில் உள்ள அனைத்து Trottinettes தரிப்பிடங்களும் கடந்த வாரம்முதல் அகற்றப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முற்று முழுதாக அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரான்சில் மின்சார ஸ்கூட்டரினால் ஏற்பட்ட விபத்தில்35 பேர் பலியாகியுள்ளனர். 604 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மூன்றுஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது. அதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் பரிசில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெற்றது. அதில் பெரும்பான்மையான மக்கள் இந்த மின்சார ஸ்கூட்டர்களை தடைசெய்வதற்கு ஆதரவாக வாக்கிட்டிருந்தனர். அதையடுத்தே இன்று முதல் இந்ததடை விதிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்