Paristamil Navigation Paristamil advert login

கனடாவுக்கு அனுப்புவதாக பாரிய நிதி மோசடி - வவுனியாவில் சிக்கிய நபர்

கனடாவுக்கு அனுப்புவதாக பாரிய நிதி மோசடி - வவுனியாவில் சிக்கிய நபர்

1 புரட்டாசி 2023 வெள்ளி 05:10 | பார்வைகள் : 8366


கனடா அனுப்புவதாக பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நபர்களிடம் கனடா அனுப்புவதாக பணத்தை பெற்றுள்ளார்.

தலா ஒவ்வொருவரிடமிருந்தும் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றுள்ளதுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார். எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்