இலங்கையில் பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி
1 புரட்டாசி 2023 வெள்ளி 05:11 | பார்வைகள் : 13984
ஓகஸ்ட் மாத நிறைவில் பணவீக்கம் 4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் நாட்டின் பணவீக்கம் 50.6 வீதமாக பதிவாகியிருந்தது.
இந்த மாதம் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு மறை பெறுமதியில் காணப்படுகின்ற போதிலும், உணவல்லா பொருட்கள் மற்றும் சேவைகளில் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan