Paristamil Navigation Paristamil advert login

மண்சரிவு - Mont-Blanc சுரங்கப்பாதை மூடப்படுவதில் தாமதம்

மண்சரிவு - Mont-Blanc சுரங்கப்பாதை மூடப்படுவதில் தாமதம்

1 புரட்டாசி 2023 வெள்ளி 08:00 | பார்வைகள் : 8419


Savoie நகரில் ஏற்பட்டுள்ள மண்சரிவை அடுத்து, பிரான்ஸ் இத்தாலியை இணைக்கும்Mont-Blanc சுரங்கப்பாதை திருத்தப்பணிகளுக்காக மூடப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த திருத்தப்பணிகள்பிற்போடப்பட்டுள்ளன.

Maurienne (Savoie) பள்ளத்தாக்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்கற்பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டது. அதை அடுத்து செப்டம்பர் 10 ஆம் திகதி வரைபரிஸ் இத்தாலிக்கிடையே பயணிக்கும் TGV நெடுந்தூர தொடருந்து சேவைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை, திருத்தப்பணிகளுக்காக Mont-Blanc சுரங்கப்பாதை மூடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சுரங்கப்பாதை திருத்தப்பணிகள் பிற்போடப்பட்டுள்ளதாகபிரான்ஸ்-இத்தாலி இணைந்து தீர்மானம் எடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுசெப்டம்பரிலேயே திருத்தப்பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்படி சுரங்கப்பாதை வழியாக மறு அறிவித்தல் வரை 3.5 தொன் எடைக்குமேற்பட்ட வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும்குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்