'Real Madrid' கழகத்தில் இன்று உத்தியேகபூர்வமாக இணையும் Kylian Mbappé, 80 000 சீட்டுகள் விற்பனை.

16 ஆடி 2024 செவ்வாய் 07:05 | பார்வைகள் : 8796
பிரான்ஸ் தேசத்தின் நட்சத்திர உதைபந்தாட்ட வீரரான Kylian Mbappe
உத்தியோகபூர்வ உதைபந்தாட்ட வீரராக 2015ம் ஆண்டு Monaco மாகாணத்தின் AS Monaco கழகத்தில் விளையாடத் தொடங்கினார், பின்னர் அவரின் திறைமையான விளையாட்டு 2017ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் அணியிலும், அதே ஆண்டு Paris Saint-Germain கழகத்திலும் விளையாடும் தகுதியை அவருக்கு வழங்கியது. 7 ஆண்டுகள் Paris Saint-Germain கழகத்தில் தொடர்ந்த அவரின் ஒப்பந்தம் இவ்வாண்டு நிறைவடைந்த நிலையில், ஒப்பந்தம் புதிப்பிக்கப் படவில்லை. இதனால் Espace நாட்டின் தலைநகரான Madridல் உள்ள 'Real Madrid' கழகம் அவரை ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதனையடுத்து இன்று (16/07) Kylian Mbappe உத்தியோகபூர்வமாக 'Real Madrid' கழகத்தில் வரும் ஐந்து ஆண்டுகள் விளையாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார் இந்த நிகழ்வு Madrid இல் உள்ள பெரும் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைக் காண 'Real Madrid' கழகத்தின் ஆதரவாளர்கள் அங்கு கூடவுள்ளனர், இதற்காக இலவசமாக வழங்கப்பட்ட நுழைச்சீட்டுகள் 80 000 சீட்டுக்களும் காலியாகியுள்ளது.
அங்கு Kylian Mbappe அவர்களுக்கு இலக்கம் 9 ஒதுக்கப்பட்டுள்ளது, 'Kylian Mbappe 9' என பொறிக்கப்பட்ட ரீ சேட் அங்கு விற்கப்படுகிறது ஆர்வம் மிகுந்த ஆதரவாளர்கள் 300€ வரை பணம் செலுத்தி ரீ சேட்டுகளை வாங்கிவருகின்றனர். 'Real Madrid' கழகத்தில் விளையாடும் Kylian Mbappe நாடுகளுக்கு இடையே நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிகளின் போது தொடர்ந்தும் பிரான்ஸ் நாட்டின் அணியிலேயே விளையாடுவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.