லியோனல் மெஸ்ஸியின் உணர்ச்சிபூர்வமான வெற்றிக் கொண்டாட்டம்
16 ஆடி 2024 செவ்வாய் 07:43 | பார்வைகள் : 574
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் காயம்பட்ட லியோனல் மெஸ்ஸியின் உணர்ச்சிபூர்வமான காணொளிகல் வைரலாகிவருகின்றன.
2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கொலம்பியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அர்ஜென்டினா அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
அமெரிக்காவில் நடைபெற்று இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க போட்டியின் 2-வது பாதியில், அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு வலது கணுக்காலில் ஏற்பட்ட பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அர்ஜென்டினா தேசிய அணியின் கேப்டன் காயம் அடைந்தாலும் ஆட்டத்தை தொடர முயன்றார், ஆனால் வலி அவரை தொடர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை.
கால்பந்து வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வீரர், 37 வயதில் இது அவரது கடைசி கோபா அமெரிக்கா என்று தெளிவாக இருந்தது, இருந்து அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அவரது கால்பந்தாட்ட வாழ்க்கையின் மற்ற கட்டங்களில் அவர் ஏமாற்றங்களையும் வேதனையான செயல்முறைகளையும் சந்தித்திருந்தாலும், இப்போட்டியில் முழுமையாக விளையாடமுடியாமல் போனதற்காக அழுதது போல், அவர் ஒருபோதும் கண்ணீரில் இருந்ததில்லை.
இதனைப் பார்த்த ரசிகர்கள் 'மெஸ்ஸி., மெஸ்ஸி.,' என அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
அர்ஜென்டினா பெஞ்சில் அமர்ந்து அழுது கொண்டிருந்த அவரது படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பரபரப்பான இறுதி நிமிடங்களை வெளியில் இருந்து பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மெஸ்ஸி, மார்டின்ஸ் கோல் அடித்ததும் மகிழ்ச்சியை கொண்டாடினார்.
காயம்பட்ட காலுடன் நொண்டி கொண்டே சக வீரரை கட்டியணைத்து உணர்ச்சிவசத்தில் பொங்கினார். அதன் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டத்தின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ (Lo Celso) அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் (Lautaro Martinez) இறுதிப் போட்டியின் முதல் கோலை அடித்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர்.
இதன்மூலம், அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.