■ பெல்ஜியத்தில் நான்கு பிரெஞ்சு இளைஞர்கள் பலி..!!
16 ஆடி 2024 செவ்வாய் 08:34 | பார்வைகள் : 2284
பெல்ஜியத்தில் ஏற்பட்ட வீதி விபத்து ஒன்றில் நான்கு பிரெஞ்சு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
19 தொடக்கம் 21 வயதுடைய நான்கு இளைஞர்களே விபத்தில் பலியாகியுள்ளனர். ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில், Mouscron நெடுஞ்சாலையில் பயணித்த மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நால்வருமே பலியாகியுள்ளனர்.
அவர்களது மகிழுந்து 90 கி.மீ வேகக்கட்டுப்பாடுள்ள வீதியில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் ஐந்தாவது நபர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரான்சில் இருந்து பெல்ஜியத்துக்கு பயணித்த குறித்த இளைஞர்கள், அங்கிருந்து நண்பன் ஒருவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் பிரான்ஸ் நோக்கி வந்துகொண்டிருந்த போது மகிழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.