ட்விட்டரில் புதிய வசதி அறிமுகம்
1 புரட்டாசி 2023 வெள்ளி 06:51 | பார்வைகள் : 4637
ட்விட்டரில் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டரிலிருந்து (X) யாரையாவது அழைக்க வேண்டுமா? அல்லது வீடியோ கால் செய்ய வேண்டுமா? அந்த வசதியை விரைவில் உங்களுக்கு வழங்க ட்விட்டர் தயாராக உள்ளது. இதனை ட்விட்டர் (எக்ஸ்) தலைவர் எலமன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மஸ்க் வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளார். மஸ்க்கின் ட்வீட் படி, ட்விட்டர் மூலம் விரைவில் கிடைக்கப்பெறும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி, எந்த தொலைபேசி எண்ணும் இல்லாமல் iOS, Android, Mac மற்றும் PC ஆகியவற்றில் வேலை செய்யும்.
இருப்பினும், ட்விட்டர் பயனர்களுக்கு இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்பதை மஸ்க் தெளிவுபடுத்தவில்லை.
இந்த புதிய அம்சம் விரைவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ட்விட்டரில் விரைவில் வரவிருக்கும் ஆடியோ, வீடியோ கால் வசதி ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கிடைக்குமா? இது அனைவருக்கும் கிடைக்குமா என்பது குறித்து மஸ்க் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி பற்றி கேள்விப்படுவது இது முதல் முறையல்ல.
நிறுவனத்தின் வடிவமைப்பாளர் ஆண்ட்ரூ கான்வே ஜூலையில் அம்சங்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார்.
தற்போது வாட்ஸ்அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி உள்ளது. அதுவும் தொலைபேசி எண்ணின் உதவியுடன் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
ட்விட்டரில் கிடைக்கும் அம்சத்தில், தொலைபேசி எண் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று மஸ்க் தெரிவித்தார். இதன் மூலம், மஸ்க்கின் சமீபத்திய விளம்பரம் ட்விட்டர் பயனர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது.