Paristamil Navigation Paristamil advert login

"பாரிஸ் 2024" ஒதுக்கப்பட்ட பாதைகளில் பயணித்தால், 135€ அபராதம்.

16 ஆடி 2024 செவ்வாய் 18:23 | பார்வைகள் : 5895


நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக பரிசின் சுற்றுவட்ட வேக வீதியான 'boulevard périphérique' உட்பட பாரிசிஸ் வீதிகள், தலைநகரை வெளிமாவட்டங்களுடன் இணைக்கும் A1, A4 போன்ற பல  வீதிகளில் சுமார் 185 கிலோமீட்டர் தூரத்துக்கு 'Paris 2024' தரை அடையாளங்கள், சாலை அடையாளங்கள் அல்லது ஒளிரும் அடையாளங்களால் குறியிடப்பட்ட வீதிகளில் பயணிக்கும் தடை கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

குறித்த பாதைகளில் விளையாட்டு வீரர்கள், பிரதிநிதிகள், அவசரகால மற்றும் பாதுகாப்பு வாகனங்கள், டாக்சிகள் (ஆனால் VTCகள் அல்ல) மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அங்கு செல்லலாம்.

அந்த பாதையில் பயணிக்கும் வாகனங்களின் உரிமத் தகடுகளை ஸ்கேன் செய்யும் ஏஜெண்டுகள் அல்லது தானியங்கி ரேடார்கள் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் விளைவாக, இந்த பாதைகளை முறையற்ற முறையில் பயன்படுத்தினால் 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்,

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்