Paristamil Navigation Paristamil advert login

கலவரக்காரர்களின் வீடுகள் பறிமுதல் - உள்துறை அமைச்சர் அறிவிப்பு

கலவரக்காரர்களின் வீடுகள் பறிமுதல் - உள்துறை அமைச்சர் அறிவிப்பு

1 புரட்டாசி 2023 வெள்ளி 09:00 | பார்வைகள் : 14205


சமூக வீடமைப்பில் (logements sociaux) வசிக்கும் கலவரக்காரர்களைஅங்கிருந்து வெளியேற்றும்படி காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சர்Gérald Darmanin  அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள குறைந்த வாடகையிலானகுடியிருப்பு கட்டிடத்தில் வசிக்கும் நபர்கள் யாரேனும் அண்மையில் இடம்பெற்றஇரவு நேர வன்முறையில் ஈடுபட்டிருந்தால், அவர்களை அவ்வீடுகளை விட்டுவெளியேற்றும் படி அவர் அறிவித்துள்ளார்.

அண்மையில், Val-d'Oise மாவட்டத்தில் உள்ள சமூக குடியிருப்பு வீடொன்றில்வசித்த நபர் ஒருவர் மேற்படி வன்முறையில் ஈடுபட்டிருந்தமைக்காகவெளியேற்றப்பட்டிருந்தார்.

‘சமூகத்துக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் சமூக குடியிருப்புகளில்இணைந்து வாழ்வது பொருத்தமற்றது’ என தெரிவித்த உள்துறை அமைச்சர் இந்தவெளியேற்ற நிகழ்வினையும் நினைவு படுத்தினார்.

அதேவேளை, சமூக குடியிருப்பு வீடுகளில் வசிப்பவர்கள் சட்டவிரோத செயல்களில்ஈடுபட்டால் அவர்களது வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என சட்டம் உள்ளமையும்(சட்டம் : 89-462. இயற்றப்பட்ட திகதி :  6 July 1989) குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்