Paristamil Navigation Paristamil advert login

இலங்கை காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

இலங்கை காலநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

17 ஆடி 2024 புதன் 11:27 | பார்வைகள் : 1529


அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இயங்குநிலை தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள கடற்பகுதியில் மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்