■ பரிஸ் : உணவகம் மீது பாய்ந்த மகிழுந்து.. ஒருவர் பலி.. பலர் காயம்!!
18 ஆடி 2024 வியாழன் 04:16 | பார்வைகள் : 10282
மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணித்து உணவகம் ஒன்றுக்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று, ஜூலை 17, புதன்கிழமை மாலை 7.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. 20 ஆம் வட்டாரத்தின் avenue du Père-Lachaise வீதியில் உள்ள உணவகம் ஒன்றின் முற்றத்தில் (terrasse) பலர் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது, வேகமாக வந்த மகிழுந்து ஒன்று அவர்களை மோதித்தள்ளியுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினர், மருத்துவ குழுவினர் அழைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், 'மகிழுந்து அதிவேகமாக வந்து மோதியது!' தெரிவித்தனர்.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ விபத்து தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan