■ நீஸ் நகரில் பாரிய தீ பரவல்... சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலி..!

18 ஆடி 2024 வியாழன் 08:07 | பார்வைகள் : 9052
நீஸ் நகரில் (Nice - Alpes-Maritimes) நேற்று புதன்கிழமை நள்ளிரவு வீடொன்றில் தீ பரவியதில் சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
Santoline வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென தீ பரவியது. தீயணைப்பு படையினர் அழைக்கப்படுவதற்கு முன்னரே நிலமை கைமீறிச் சென்றது. கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் ஏற்பட்ட தீ, வேகமாக மேற் தளங்களுக்கும் பரவியது.
இச்சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த சிறுவர்கள் 5, 7 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும், கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த மேலும் 33 பேர் பாதுகாப்பாக கடிட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் இச்சம்பவம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1