Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் வேலையில் சேர கர்ப்ப பரிசோதனை அவசியம் 

சீனாவில் வேலையில் சேர கர்ப்ப பரிசோதனை அவசியம் 

18 ஆடி 2024 வியாழன் 08:26 | பார்வைகள் : 1656


சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெண்கள் வேலைக்கு செல்லும் முன் கர்ப்ப பரிசோதனை அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெண்கள் பிரசவகால விடுப்பு தவிர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

அங்குள்ள ஜிங்சு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

அதோடு நிற்காமல் நேர்முக தேர்வுகளின் போது பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். 

அப்போது பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

அதோடு நிற்காமல் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பற்றியும் கேள்விகள் கேட்கப்ப டுகின்றன. 

ஏற்கனவே குழந்தைகள் பிறந்து இருந்தால் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. 

இது குறித்து ஆன்லைன் மூலம் அரசு கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றனர்.

அப்போது 16 நிறுவனங்களில் சட்டவி ரோதமாக 168 பெண்களுக்கு உடற் பரிசோதனை என்ற பெயரில் கர்ப்ப பரிசோதனை செய்தது கண்டுபி டிக்கப்பட்டது. 

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்