யூரோ கிண்ணம்... இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம்
18 ஆடி 2024 வியாழன் 08:44 | பார்வைகள் : 967
சிவப்பு நிற சட்டையுடன் களமிறங்கும் அணிக்கு எதிராக ஆரம்பம் முதலே மோசமான விளையாட்டை இங்கிலாந்து அணி பதிவு செய்தது என வாழும் நாஸ்ட்ராடாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கியமாக இன்னொரு காரணமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயின் அணி யூரோ கிண்ணம் வெல்லும் என்பதை கணித்தவர் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசிலின் Athos Salomé.
அதாவது இந்த முறை சிவப்பு சட்டையுடன் களமிறங்கும் அணி யூரோ கிண்ணம் வெல்லும் என அவர் கணித்திருந்தார்.
எலிசபெத் ராணியாரின் மறைவு, கோவிட் பெருந்தொற்று, கத்தார் உலக கிண்ணம் உட்பட பல்வேறு துல்லியமான கணிப்புகளை அவர் இதுவரை பதிவு செய்துள்ளார்.
மட்டுமின்றி, 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெல்லும் என்றும் யூரோ கிண்ணம் தொடர்பில் அவர் தமது கணிப்பை பதிவு செய்திருந்தார். தற்போது, இங்கிலாந்து அணியிடம் மன்னிப்புக் கோரியுள்ள Athos Salomé,
இங்கிலாந்து அணியின் ஹரி கேன் தனது முழு பங்களிப்பையும் வழங்கவில்லை.
இங்கிலாந்து அணியின் ஆட்டம் துவக்கம் முதலே ஏமாற்றமளித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இங்கிலாந்து அணி ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் உற்சாகமின்மை காணப்பட்டதை தாம் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முதன்மையான காரணமாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.