ரெட்ரோ டிசைனில் Royal Enfield Guerrilla 450! விலை, செயல்திறன்....
18 ஆடி 2024 வியாழன் 08:49 | பார்வைகள் : 1271
Royal Enfield நிறுவனம் இந்தியாவில் புதிய Guerrilla 450 Roadster பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரில்லா 450 பைக் இந்தியாவில் ₹2.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Royal Enfield நிறுவனம் ஹிமாலயன் 450 பைக்கிற்கு அடுத்து, ஷெர்பா 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கிய இரண்டாவது மாடல் பைக் இதுவாகும்.
கொரில்லா 450 ஒரு கிளாசிக் ரோட்ஸ்டர் பாணியைக் கொண்டுள்ளது.
இதில் வட்ட வடிவ LED ஹெட்லைட், கண்ணீர் துளி வடிவ எரிபொருள் தொட்டி(teardrop-shaped fuel tank), தாழ்வான இருக்கை உயரம் மற்றும் வசதியான ரைடிங் நிலை ஆகியவை இதை ஒரு பன்முக பயன்பாட்டுக்கான தினசரி பைக்காக மாற்றுகிறது.
கொரில்லா 450 452cc, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூலிங் இன்ஜின் கொண்டுள்ளது.
இது 39.47 bhp திறனையும் 40 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
6-speed gearbox, slip மற்றும் assist clutch மற்றும் ride-by-wire system ஆகியவை மென்மையான ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது.
இந்த மோட்டார் சைக்கிள் steel tubular frame பயன்படுத்துகிறது, இதில் இன்ஜின்stressed member செயல்படுகிறது.
முன்புறத்தில் 43மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கும்(43mm telescopic fork), பின்புறத்தில் லிங்கேஜ் மோனோஷாக் (linkage monoshock) சஸ்பென்ஷனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
185 கிலோ kerb weight மற்றும் 780 மிமீ இருக்கை உயரம் ஆகியவை நெரிசலான நகர போக்குவரத்தில் எளிதாக இயக்குவதற்கு உதவும்.
டாப்-எண்ட் வேரியண்ட்டுகளில் ஒருங்கிணைந்த கூகுள் Google Maps மற்றும் media controlsகளுடன் 4-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஸ்டாண்டர்டு அம்சங்களாக முழு LED லைட்டிங் மற்றும் ஒரு USB Type-C சார்ஜிங் போர்ட் ஆகியவை இருக்கும்.
பேஸ் வேரியண்டில் டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் விருப்பமான ட்ரிப்பர் நேவி கேஷன் பாட் ஆகியவை கிடைக்கும்.
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 ₹2.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் மூன்று வேரியண்ட்களில் வருகிறது.
கொரில்லா 450 அனலாக்: ₹2.39 லட்சம்
கொரில்லா 450 டேஷ்: ₹2.49 லட்சம்
கொரில்லா 450 ஃ பிளாஷ்: ₹2.54 லட்சம்