Paristamil Navigation Paristamil advert login

கிரீன் சில்லி சிக்கன்.

கிரீன் சில்லி சிக்கன்.

18 ஆடி 2024 வியாழன் 09:37 | பார்வைகள் : 572


பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படுவதால் அதன் சுவை சற்று வித்தியாசமாகவும், சாப்பிடுவதற்கு அருமையாகவும் இருக்கும். முக்கியமாக, இந்த ரெசிபி செய்வது ரொம்பவே ஈசியாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை இந்த ரெசிபி செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், கிரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

சிக்கன் - ஒரு கிலோ 
பச்சை மிளகாய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10
இஞ்சி - 1 துண்டு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
வறுத்த சீரகப்பொடி - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

கிரீன் சில்லி சிக்கன் செய்ய முதலில், எடுத்து வைத்த சிக்கனை தண்ணீரில் நன்கு கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் 3, சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த பேஸ்டை கழுவி வைத்த சிக்கனுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதை சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

இதனை அடுத்து ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம் போட்டு தாளிக்கவும். பின் எடுத்து வைத்த பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்கவும். 

இதனை அடுத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து இரண்டு பக்கமும் நன்கு பிரட்டி போட்டு வதக்கவும். பின் அதில் மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். 

பிறகு ஒரு மூடியை வைத்து பாத்திரத்தை மூடி அடுப்பை குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கவும். அவ்வளவுதான் காரசாரமான க்ரீன் சில்லி சிக்கன் தயார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்