தாய்லாந்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தேநீர் அருந்திய ஆறு பேர் பலி

18 ஆடி 2024 வியாழன் 09:47 | பார்வைகள் : 9796
தாய்லாந்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஆறுபேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின் சடலங்களை பொலிஸார் கண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் அமெரிக்க பிரஜைகள் ஏனைய நால்வரும் வியாட்நாமை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஆறுபேரினது தேநீர்கோப்பைகளில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான முதலீடு தொடர்பான தகராறுகாரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேசையில் இன்னமும் பயன்படுத்தப்படாத உணவுகள் பிளாஸ்டிக் துண்டொன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் , பயன்படுத்தப்பட்ட தேநீர்கோப்பைகளில் வெள்ளை நிற பவுடர்போன்ற பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் தங்கியிருந்த பகுதியின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததுடன் பின்கதவு திறந்த நிலையில் காணப்பட்டதாகவும் னபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரை தேடுவதாக தெரிவித்திருந்த பொலிஸார் தற்போது அந்த கோணத்தில் விசாரணையை கைவிட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஒருவரே தேநீர் கோப்பையில் விசத்தை கலந்திருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட தேநீர்கோப்பைகளிலும் உயிரிழந்தஒருவரின் உடலிலும் இரசாயனபதார்த்தங்கள் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025