Paristamil Navigation Paristamil advert login

 ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து உறுதி

 ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து உறுதி

19 ஆடி 2024 வெள்ளி 09:37 | பார்வைகள் : 6137


இந்திய அணியின் துணை கேப்டனாகிய ஹர்திக் பாண்டியா தனது காதல் மனைவியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதியன்று செர்பிய நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் (Nataša Stanković) என்பவரை காதலித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமாகிய ஹர்திக் பாண்டியா திருமணம் செய்தார்.

அதே வருடத்தில் அவர்களுக்கு அகஸ்திய பாண்டியா (Agastya Pandya) என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. அவர்களுடைய காதல் வாழ்கையை பலரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது.

சமூக வலைத்தளத்தில் அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.

இருப்பினும், சமீக காலமாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதில்லை.

அவருடைய மனைவி Natasa Stankovic Pandya என இன்ஸ்டாவில் இருந்த பெயரில் பாண்டியா என்பதை மட்டும் நீக்கியிருந்தார். இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுவிற்றதாக வதந்தி எழும்பியது.

இருப்பினும் இது குறித்து அவர்கள் இருவரும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடமாலேயே இருந்தனர்.

இந்நிலையில் அனைத்து வதந்திகளுக்கும் முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தங்களது விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்