கன்னட இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா?
19 ஆடி 2024 வெள்ளி 09:46 | பார்வைகள் : 364
சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.கன்னட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா?இந்த கதாபாத்திரம் சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும் சூர்யா தோன்றும் காட்சிகள் திரையரங்கையை அதிர வைத்தது. அதைத்தொடர்ந்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியிருக்கும் இந்த படம் 2024 அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் நடிகர் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கராவின் புறநானூறு போன்ற படங்களில் நடிப்பதற்கு கமிட்டானார். ஆனால் இரண்டு படங்களுமே தற்போது தொடங்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா கர்ணன் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது
இவ்வாறு பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ள சூர்யா தற்போது கன்னட இயக்குனருடன் கைகோர்க்க போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது சிவராஜ்குமாரின் பைரதி ரணகல் படத்தின் இயக்குனர் நர்த்தன், சூர்யாவை இயக்கப் போவதாகவும் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அப்டேட் கிடைத்துள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.