Paristamil Navigation Paristamil advert login

உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட Bernard Arnault!!

உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட Bernard Arnault!!

19 ஆடி 2024 வெள்ளி 12:14 | பார்வைகள் : 3949


உலக செல்வந்தர்கள் பட்டியலில் பிரெஞ்சு பில்லியரான Bernard Arnault மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Forbes பத்திரிகை வெளியிட்ட தரவுகளின் படி, அவருடைய இன்றைய சொத்து மதிப்பு 191.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உலகின் பிரபலமான நிறுவனங்களை எல்லாம் வாங்கிக்குவிக்கும் அவர், LVMH  நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். உலகம் முழுவதும் 75 நிறுவனங்களை கொண்டு இயங்கி வரும் அவர் சில வாரங்களாக உலகின் இரண்டாவது செல்வந்தராக இருந்தார். அவரது இடத்தை தற்போது  அமெரிக்க நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos பிடித்துக்கொண்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 201.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்த பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது எலான் மஸ்க் ஆவார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 250.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 

Bernard Arnault அண்மையில் TikTok செயலியின் தாய் நிறுவனமான ByteDance மற்றும்  Netflix  உள்ளிட்ட பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். 

அதேவேளை, இவ்வருடதின் ஆரம்பத்தில் அவர் உலகின் முதலாவது பணக்காரராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்