உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் பிரித்தானியா
19 ஆடி 2024 வெள்ளி 16:47 | பார்வைகள் : 2866
பிரித்தானியா தயாரித்துள்ள ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை பிரித்தானியா ஏற்க மறுத்துள்ளது.
மட்டுமின்றி, அப்படியான ஒரு தாக்குதலுக்கு பிரித்தானியா எப்போதும் உடன்படாது என்றும் பாதுகாப்பு செயலர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சரவையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாற்றியுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளில் ஒரு வெளிநாட்டு தலைவர் உரையாற்றுவது இதுவே முதல்முறை. உக்ரைன் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு மட்டுமே பிரித்தானியா ஆயுதங்களை வழங்கி வருகிறது என குறிப்பிட்டுள்ள ஜான் ஹீலி,
ஆனால் ரஷ்யாவின் இலக்குகளை பிரித்தானியா தாக்க முடியாது என்றும் அதை உக்ரைன் மட்டுமே முன்னெடுக்க வேண்டும் என்றார். மட்டுமின்றி சர்வதேச மனிதாபிமான விதிகளுக்கு உட்பட்டு வரம்புகளுக்குள் செய்யப்பட வேண்டும் என்றார்.
பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தலாம் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது உக்ரைன் பாதுகாப்புகாக மட்டுமே பயன்படுத்தலாம்.
ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது உக்ரைன் எடுக்கும் முடிவு என்றார். ரஷ்யாவுக்கு எதிராக Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்த அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுக்க உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் பேசினார்.
அத்துடன், ஐரோப்பாவின் பாதுகாப்பு தொழில்துறை தளத்தை கட்டியெழுப்ப உதவுமாறும் பிரித்தானிய அமைச்சர்களை அவர் வலியுறுத்தினார். மேலும், ரிஷி சுனக் அரசாங்கம் அளித்துவந்த ஆதரவை கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கமும் தொடரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.