இலங்கையில் பேருந்து கட்டணம் 4 சதவிகிதத்தால் உயர்வு
1 புரட்டாசி 2023 வெள்ளி 10:48 | பார்வைகள் : 5719
எரிபொருள் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 4 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கட்டண திருத்தத்தை அமுல்படுத்தும் திகதி தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் பேருந்து சங்கங்களின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைவாக போக்குவரத்து ஆணைக்குழு ஒப்புதலுக்கு அமைய எதிர்காலத்தில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.