சீனாவில் பாலம் இடிந்து 11 பேர் பலி - 30 பேர் மாயம்
20 ஆடி 2024 சனி 11:17 | பார்வைகள் : 1625
சீனாவில் கனமழை பெய்து வருகிறது. ஷான்சி மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று சனிக்கிழமை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காணாமல் போயினர்.
ஜசுய் கவுண்டியில் உள்ள டேனிங் எக்ஸ்பிரஸ்வேயில் இருந்து ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களில் இருந்து 11 சடலங்கள் மீட்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த விபத்தின் காரணமாக மாயமான மேலும் 20 வாகனங்கள் எங்கே என இன்னும் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டறிந்தார். மீட்பு பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக ஜி ஜின்பிங் கூறினார். ஆனால் உள்ளாட்சிகள் பொறுப்பேற்று அனைத்தையும் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாலம் இடிந்து விழுந்த இடத்திற்கு சிறப்புக் குழுவை அனுப்பியுள்ளதாக தேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுவில் 859 பேர், 90 வாகனங்கள், 20 படகுகள், 41 ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.