Paristamil Navigation Paristamil advert login

விஜய் - ரம்பா சந்திப்புக்கு இதுதான் உண்மை காரணமா?

விஜய் - ரம்பா சந்திப்புக்கு இதுதான் உண்மை காரணமா?

20 ஆடி 2024 சனி 15:56 | பார்வைகள் : 5405


கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று தான் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விஜய்யின் அடுத்த படத்தில் ரம்பா நடிக்க இருக்கிறார் போன்ற செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இன்னொரு தகவல் மிக வேகமாக இணையத்தில் பரவி வருகிறது. அந்த தகவலின் படி விஜய் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் நடிகை ரம்பாவும் ஒரு வீடு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அபார்ட்மெண்ட் வீட்டில் ரம்பா குடியேற வந்தபோதுதான் விஜய்யை தனது குடும்பத்துடன் மரியாதை நிமித்தமாக ரம்பா சந்தித்ததாக தெரிகிறது.

ரம்பாவின் கணவர் சென்னையில் சில பிசினஸ்கள் தொடங்க இருக்கும் நிலையில் இங்கிருந்து பிசினஸை பார்த்து கொள்வதற்காக விஜய் வீடு இருக்கும் அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கி இருப்பதாகவும் அதன் பின்னர் தான் இந்த மரியாதை நிமித்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நீலாங்கரை வீடு அருகே நடிகை த்ரிஷா ஒரு வீடு வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய் வசித்து வரும் அப்பார்ட்மெண்டில் ரம்பாவும் வீடு வாங்கி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்