Paristamil Navigation Paristamil advert login

ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின், இசையமைப்பாளர் யார்?

ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின், இசையமைப்பாளர் யார்?

20 ஆடி 2024 சனி 16:02 | பார்வைகள் : 991


தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும், சஞ்சய் தன்னுடைய தாத்தாவைப் போல் இயக்குனராக வேண்டும் என்பதையே, இலட்சியமாகக் வைத்துள்ளார்.

அதன்படி இவர் வெளிநாட்டில் சினிமா இயக்கம் தொடர்பான படிப்பை படித்து முடித்துவிட்டு இந்தியா வந்த கையேடு, திரைக்கதை ஒன்றை தயார் செய்த நிலையில், அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க முடிவு செய்தது. இந்த தகவலையும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பல மாதங்கள் ஆன பிறகும் தற்போது வரை, விஜய் மகன் சஞ்சய் இயக்க உள்ள திரைப்படம் குறித்த, எந்த ஒரு தகவலும் அதிகார பூர்வமாக வெளியாகவில்லை.

ஆனால் அவ்வப்போது இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின், மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாவது உண்டு. அதன்படி  இப்படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பார் என்றும், அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. 

அதே போல் ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்பத்திற்கு, ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும், இல்லையென்றால் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது மலையாளத்தில் பல இளம் ரசிகர்களை கவரும் விதமாக இசையமைத்து வரும் சுஷின் ஷாம் என்பவருடன் ஜேசன் சஞ்சய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எனவே இவர் இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதையை முழுமையாக ஜேசன் சஞ்சய் எழுதி முடித்து விட்டதாகவும், கூடிய விரைவில் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. மகன் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பூஜையிலாவது தளபதி விஜய் கலந்து கொண்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்