இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

21 ஆடி 2024 ஞாயிறு 08:03 | பார்வைகள் : 2980
இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த மனலோ மார்வேஸ் (Manolo Marquez) நியமிக்கப்பட்டுள்ளார்.
இகோர் ஸ்டிமாக்கின் (Igor Stimac) சர்ச்சைக்குரிய வெளியேற்றத்திற்குப் பிறகு, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) அவருக்குப் பதிலாக மார்வேஸை நியமித்தது.
தற்போது கோவா எஃப்சியின் பயிற்சியாளராக இருக்கும் மார்வேஸ், கால்பந்து பயிற்சியில் அபார அனுபவம் பெற்றவர்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற AIFF கூட்டத்தில், புதிய பயிற்சியாளராக மார்வேஸ் நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.