படித்த கரடி
21 ஆடி 2024 ஞாயிறு 08:51 | பார்வைகள் : 768
ஒரு காட்டுல ஒரு படிச்ச கரடி வாழ்ந்துகிட்டு வந்துச்சு. அது எப்பவும் புத்தகத்த படிச்சுக்கிட்டே இருக்கும்
இத பத்த மத்த விலங்குகள் கரடியை எப்பயும் வம்பிழுக்கிட்டே இருக்கும்
ஒருநாள் வானத்துல பருந்துபோன ஹெலிகாப்டர்ல இருந்து ஒரு செல்போன் அந்த காட்டுக்குள்ள விழுந்துச்சு
அந்த செல்போன் திடீர்னு பெல் அடிக்க ஆரம்பிச்சது, அத பாத்த எல்லா மிருகமும் பயந்து நடுங்குச்சு.
என்னடா இந்த கல்லு மாதிரி இருக்குற பொருள் பிரகாசமான ஒலியோட சத்தம் போடுதுன்னு சொல்லி பயந்துச்சுங்க
அப்பதான் மான் குட்டி சொல்லுச்சு , நம்ம கூட்டத்துலயா படிச்சது அந்த கரடிதான் அதுகிட்ட இது என்னனு கேளுங்கன்னு சொல்லுச்சு
உடனே எல்லா மிருகமும் கரடிக்கிட்ட நடந்தத சொல்லுச்சுங்க, அந்த செல்போன பத்த கரடி சிரிச்சது
நான் படிச்சிருக்கேன் இரு மனிதர்கள் பயன்படுத்துற தொலைத்தொடர்பு கருவு, இது எப்படியோ நம்ம காட்டிலுள்ள விழுந்துடுச்சு.
இது பயப்படற மாதிரி ஆபத்தான பொருள் கிடையாது, நீங்க எல்லாரும் இத பத்தி தெரிச்சிருக்குறதுக்கு வாய்ப்பில்லை என்ன நீங்க பாடம் படிக்குறதில்ல.
நாம் எப்பவும் புத்தகம் படிக்கிறதால எனக்கு இதப்பத்தி தெரிஞ்சது.
இனிமே நீங்களும் படிக்க ஆரம்பிங்க இல்லனா உண்மையாவே ஏதாவது ஆபத்தான பொருள் இங்க விழுந்துச்சுன்னா நீங்க அத தோட்டு அப்பத்துல மாட்டிக்குவிங்கனு சொல்லுச்சு
கரடி பேச்ச கேட்ட எல்லா மிருகங்களும் அப்ப இருந்து படிக்க ஆரம்பிச்சதுங்க
நீதி – ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்