அடுத்தவரின் சந்தோஷம்...
21 ஆடி 2024 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 4906
ஊரே பஞ்சத்தில் இருந்தது. அப்போது ஊர் மக்கள் எல்லாம் மீன் பிடிக்க சென்றார்கள்.
அப்போது தேவதை தோன்றி, ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள், எதையாவது கேட்டு சந்தோஷப்படுறதுதானேனு கேட்டாங்க! ஒருத்தரை அழைத்த தேவதை உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டது.
அதற்கு அந்த நபர் நான் அமெரிக்காவில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றார். சரி அப்படியே ஆகட்டும் என்றது தேவதை.
இன்னொருத்தரை அழைத்து என்ன வேண்டும் என தேவதை கேட்டது . அதற்கு அவர் நான் ஜப்பானுக்கு போய் நிறைய தொழிற்சாலைகள் கட்டி நிறைய பேருக்கு வேலை தர வேண்டும் என்றார்.
சரி அப்படியே ஆகட்டும் என்றார். மூன்றாவது ஒரு ஆளிடம் உனக்கு என்ன வேண்டும் என கேட்டது, போன ரெண்டு பேரும் திரும்பி வர வேண்டும் என்றான்,
உடனே வந்துவிட்டார்கள். அதாவது இவன் ஒன்றை கேட்டு இவன் போய் சந்தோஷமாக இருக்கிறதை விட்டுவிட்டு அடுத்தவன் சந்தோஷத்தை கெடுப்பது.


























Bons Plans
Annuaire
Scan