Paristamil Navigation Paristamil advert login

யாழில் பால் குடித்த சில மணிநேரங்களில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

யாழில் பால் குடித்த சில மணிநேரங்களில் மூன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

21 ஆடி 2024 ஞாயிறு 11:56 | பார்வைகள் : 4670


யாழ்ப்பாணத்தில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு மூன்றரை மாத பெண்குழந்தை உயிரிழந்துள்ளது. 

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது. 

சனிக்கிழமை (20) குழந்தை பால் குடித்த சில மணிநேரங்களில் அசைவின்றி காணப்பட்டுள்ளது. அதன் பின்னர், அந்தக் குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டுசென்றபோது, குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த குழந்தையின் இறப்புக்கு நிமோனியாவே காரணம் என மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்