ஒலிம்பிக் தளத்தினை பார்வையிட Saint-Denis நகருக்கு செல்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!

22 ஆடி 2024 திங்கள் 06:56 | பார்வைகள் : 6765
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று திங்கட்கிழமை Saint-Denis நகருக்கு பயணிக்கிறார். ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், அதன் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை அவர் மேற்கொள்கிறார்.
Saint-Denis நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்குகள் நிறைந்த village olympique என அழைக்கப்படும் ‘ஒலிம்பிக் கிராமம்’ அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது முழுமையாக தயாராகியுள்ளது. அதனை பார்வையிட இன்று ஜூலை 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கு அங்கு ஜனாதிபதி மக்ரோன் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் அங்கு செலவிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டாளர்களையும் சந்தித்து உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.