Paristamil Navigation Paristamil advert login

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் - முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் - முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

22 ஆடி 2024 திங்கள் 08:04 | பார்வைகள் : 3034


பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் நான்கு நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில், முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பாதுகாப்பு ஏற்பாடுகளில் பொலிசாரின் எண்ணிக்கை 45,000 கடந்துள்ளதாகவும் 10,000 ராணுவ வீரர்கள் களமிறக்கப்படவும் உள்ளனர்.

மட்டுமின்றி, ரஃபேல் போர் விமானங்களின் ஒரு படை, கண்காணிப்பு விமானங்கள், Reaper ட்ரோன்கள், அத்துடன் ஹெலிகொப்டர்களில் கண்டதும் சுட உத்தரவுடன் சிறப்பு வீரர்கள் தலைநகர் முழுவதும் ரோந்து வர உள்ளனர்.

AI தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கமெராக்கள் சாலைகளை ஒவ்வொரு அங்குலமாக அலச உள்ளது. 

மேலும் வெள்ளிக்கிழமை துவக்க விழாவினை முன்னிட்டு 93 மைல்கள் தொலைவுக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி ஒன்றை உருவாக்கி, அதில் அனைத்து அணிகளுக்கான அணிவகுப்பை முன்னெடுக்க உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் அரங்கத்திற்கு வெறும் 30 நிமிடங்களில் பாதுகாப்பு குழுவினர் வந்து சேரும் வகையில் சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

மேலும், விரிவான பின்னணி ஆய்வுகளின் முடிவில் 3,900 பேர்களுக்கு ஒலிம்பிக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என அடையாளம் கானப்பட்ட 155 சந்தேக நபர்களின் குடியிருப்புகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, 40 நாடுகள் மொத்தம் 2,000 பொலிசாரை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாரீஸ் நகரில் களமிறக்குகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்