Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான பிரித்தானியவின்  புதிய திட்டம்

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான பிரித்தானியவின்  புதிய திட்டம்

22 ஆடி 2024 திங்கள் 08:48 | பார்வைகள் : 1404


பிரித்தானியாவில் ஆட்சி மாறிய பின் புதிய நடைமுறைகள் அமுல்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்களை நம்பி இருப்பதை குறைப்பதற்காகவும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான பிரித்தானியாவின் புதிய அரசு, Skills England என்றொரு அமைப்பை நிறுவியுள்ளது.

இந்த அமைப்பின் நோக்கம், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிரித்தானியர்களையே பிரித்தானியாவுக்கு தேவையான பணியிடங்களுக்கு தயார் செய்வதாகும்.

அதாவது, காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு வெளிநாட்டுப் பணியாளர்களை சார்ந்திருப்பதற்கு பதிலாக, பிரித்தானிய இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டே அந்த காலியிடங்களை நிரப்புவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பிரித்தானியாவின் புதிய பிரதமர் நேரடியாக புலம்பெயர்ந்தோரை வெளியேற்றாமல், அவர்களுக்கு பதிலாக பிரித்தானியர்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மறைமுகமாக புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது Skills England திட்டத்தின் மூலம் தெளிவாகிறது எனலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்