சீனாவை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் பரிதாபமாக பலி

22 ஆடி 2024 திங்கள் 09:57 | பார்வைகள் : 8523
தற்பொழுது பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் உணவு உட்கொள்வது தொடர்பில் பல சவால்களை மேற்கொள்கின்றார்கள்.
இந்நிலையில் உணவு சவாலில் ஈடுபட்ட போது சீனாவை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சமூக வலைதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்த போது உணவு சவாலில் ஈடுபட்ட 24 வயதான சீன சமூக வலைதள செல்வாக்காளர் Pan Xiaoting கடந்த ஜூலை 14ம் திகதி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pan Xiaoting அதிகப்படியான உணவு உட்கொள்வதற்கு பெயர் பெற்றவர், இவர் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பிடும் சவால்களில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சில தகவல்களின்படி, அவர் ஒரு உட்கொள்ளுதலில் 10 கிலோகிராம் உணவை உட்கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் Xiaoting ஈடுபட்ட உணவு சவாலின் போது உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தாக சமூக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரேத பரிசோதனையில், செரிக்கப்படாத உணவுடன் சிதைந்த வயிறு காரணமாக அவர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை மீறி, Xiaoting இந்த ஆபத்தான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
Xiaoting மரணம் சமூக வலைதளங்களில் ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்த கவலையைத் தூண்டியுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1