Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவிற்கு வில்லனாகும் கார்த்தி…..

சூர்யாவிற்கு வில்லனாகும் கார்த்தி…..

22 ஆடி 2024 திங்கள் 12:38 | பார்வைகள் : 4140


நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கிறது. இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி பழனிசாமி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதே சமயம் பாபி தியோல், நட்டி நடராஜ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகளும், டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு அப்டேட்டுகளும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

அதன்படி நாளை (ஜூலை 23) சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. அதே சமயம் இந்த படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதாவது இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் கங்குவா முதல் பாகத்தின் இறுதியில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் கசிந்திருந்தது. அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் கார்த்தி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் அந்த காட்சிகள் தான் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கமாக இருக்கும் எனவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதேசமயம் நடிகர் கார்த்தி இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். கங்குவா இரண்டாம் பாகத்தில் கார்த்தி- சூர்யா இருவருக்குமான காட்சிகள் தான் அதிகம் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக தூண்டியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்