Paristamil Navigation Paristamil advert login

இரண்டு முன்னணி நடிகர்களை ஒன்றிணைக்கும் வெற்றிமாறன்?

இரண்டு முன்னணி நடிகர்களை ஒன்றிணைக்கும் வெற்றிமாறன்?

22 ஆடி 2024 திங்கள் 12:50 | பார்வைகள் : 3221


நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான "பொல்லாதவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கலை உலகில் களமிறங்கியவர் தான் வெற்றிமாறன். பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அவர் இயக்கத்தில் வெளியான "ஆடுகளம்", "விசாரணை" மற்றும் "அசுரன்" ஆகிய திரைப்படங்களுக்காக மூன்று முறை அவர் தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான சூரியின் "விடுதலை" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.

ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து "பொல்லாதவன்", "ஆடுகளம்" "வடசென்னை" மற்றும் அசுரன் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவர், விரைவில் இரண்டு முன்னணி நடிகர்களை ஒன்றிணைத்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் உள்ள படத்தை இயக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அந்த திரைப்படத்தில் நடிக்க ஏற்கனவே நடிகர் தனுசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், மற்றொரு ஹீரோவாக நடிக்க பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்டிஆரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இப்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்