Paristamil Navigation Paristamil advert login

ராயன் படத்தில் ரஜினி?

ராயன் படத்தில் ரஜினி?

22 ஆடி 2024 திங்கள் 13:05 | பார்வைகள் : 693


நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வந்த தனுஷ், கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அவர் அந்த ஆண்டு பா பாண்டி என்கிற படத்தை இயக்கினார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிப்பில் பிசியானதால் டைரக்‌ஷனுக்கு ரெஸ்ட் விட்டிருந்த தனுஷ், தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அப்படத்தின் பெயர் ராயன். இது வடசென்னை, புதுப்பேட்டை பாணியில் உருவாகியிருக்கும் படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாயரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தில் தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ராயன் திரைப்படம் வருகிற ஜூலை 26-ந் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகளும் செம்ம பிசியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ், ராயன் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதைப்பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் ராயன் படத்தில் நீங்கள் நடிக்காமல் டைரக்ட் மட்டும் செய்திருந்தால், உங்கள் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என பதிலளித்துள்ளார் தனுஷ். முன்னதாக ரஜினிக்காக தனுஷ் ஒரு கதை வைத்திருப்பதாக பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். ரஜினியும் அந்த கதை பற்றி பேசி இருக்கிறார். ஒருவேளை ராயன் தான் தனுஷ், ரஜினிக்கு கூறிய கதையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

அதேபோல் தெலுங்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்கிற கேள்விக்கு பவன் கல்யாண் என தனுஷ் பதிலளித்ததும் அரங்கமே அதிர்ந்தது. அடுத்ததாக மல்டிஸ்டார் படம் பண்ண வேண்டும் என்றால் எந்த தெலுங்கு நடிகருடன் பண்ணுவீர்கள் என்கிற கேள்விக்கு ஜூனியர் என்.டி.ஆர் என பதிலளித்த தனுஷ், அவரை பிடிக்கும் என்றும் அவருடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்