Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : ஐந்து ஆண்கள் இணைந்து இளம் பெண் மீது பாலியல் பலாத்காரம்..!

பரிஸ் : ஐந்து ஆண்கள் இணைந்து இளம் பெண் மீது பாலியல் பலாத்காரம்..!

22 ஆடி 2024 திங்கள் 15:39 | பார்வைகள் : 7690


இளம் பெண் ஒருவர் ஐந்து ஆண்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் தொடுத்த வழக்கை அடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் வைத்து குறித்த பெண் ஐந்து ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Boulevard de Clichy பகுதியில் உள்ள இரவு மதுபானசாலையில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து,  சம்பவ  இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். 

அங்கு பெண் ஒருவர் கிழிந்த ஆடையுடன் தஞ்சம் புகுந்ததாகவும், அவரை ஐந்து ஆண்கள் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்