Paristamil Navigation Paristamil advert login

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

23 ஆடி 2024 செவ்வாய் 15:00 | பார்வைகள் : 5650


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

 
இன்று ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 
 
விடைத்தாள் மதிப்பீட்டிற்கான அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 
 
பாடசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பான வர்த்தமானியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். 
 
வழக்கு விசாரணை முடிந்த பின்னர் அடுத்த வாரத்திற்குள் அந்த நியமனங்கள் அனைத்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்