Paristamil Navigation Paristamil advert login

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி?

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி?

23 ஆடி 2024 செவ்வாய் 15:07 | பார்வைகள் : 599


சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் மட்டுமின்றி கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சூரி நடிக்க இருப்பதாகவும் விரைவில் கௌதம் மேனன் மற்றும் சூரி சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை’ மற்றும் ’கருடன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களில் சூரி ஹீரோவாக நடித்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்த இன்னொரு திரைப்படமான ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் சூரிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்த பெருமை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்