Paristamil Navigation Paristamil advert login

ஒரு பிரெஞ்சு பில்லியனர்.

ஒரு பிரெஞ்சு பில்லியனர்.

1 புரட்டாசி 2023 வெள்ளி 11:19 | பார்வைகள் : 4250


2023 ஆம் ஆண்டின் ‘உலகின் நம்பர் வன் பணக்காரர்’ யார் தெரியுமா? எலன் மஸ்க் அல்ல.

ஒரு பிரெஞ்சுக்காரர். பெயர் Bernard Arnault.
கடந்த 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே எலன் மஸ்க்கை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, முன்னிலையில் வந்து, 2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார் Bernard Arnault.

இந்த உலகில் 2,640 பில்லியனர்கள் ( Billionaires ) வாழ்கிறார்கள். அதில் அமெரிக்காவில் மட்டும் 735 பேர். இரண்டாம் இடத்தில் சைனா. அங்கு 562 பேர். மூன்றாம் இடத்தில்… ஆம் ஆச்சரியமூட்டும் வகையில் இந்தியா.! இங்கு 169 பில்லியனர்கள் வாழ்கிறார்கள்.

இப்போது நமது Bernard Arnault இன் கதைக்கு வருவோம். அவரிடம் மொத்தமாக 75 நிறுவனங்கள் உள்ளன. இந்த உலகில் ஆடம்பரப் பொருட்களின் தாயகம் என்றால் அது பிரான்ஸ்தான். உலகப்புகழ்பெற்ற ‘Famous Brands’ எல்லாம் பிரான்சில் இருந்துதான் உற்பத்தியாகின்றன.

Louis Vuitton தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள். அதன் உரிமையாளர்தான் Bernard Arnault. அதுமட்டுமல்ல Christian Dior, Céline, Guerlain, Loewe, Thomas Pink, Emilio Pucci, Fendi, La Samaritaine என எல்லா முக்கிய ஆடம்பர நிறுவன்களும் Bernard Arnault உடையதுதான்.

பிரான்சில் இருப்பவர்களுக்கு Le Bon Marché கடைகளைத் தெரியும். அதன் உரிமையாளரும் இவர்தான். இதைவிட ஆச்சரியம், உலகில் இரண்டாவது பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனமாகிய Carrefour இன் ஓனரும் Bernard Arnault தான்.

Nexity என்பது பிரான்சின் பிரபலமான ‘ரியல் எஸ்டேட்’ கம்பனியாகும். அதன் ஓனர் யார் என்பதை இப்போது நான் சொல்ல வேண்டுமா என்ன..?

Bernard Arnault இடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அவருக்கு போட்டியாக ஒரு நிறுவனம் வளர்கிறது என்றால், அவரது கடைக்கண் பார்வை அந்த நிறுவனத்தின்மீது விழுந்துவிடும். என்ன விலை கொடுத்தாவது அதை வாங்கிவிடுவார். இப்படி உலகம் முழுவதும் பார்வையைச் சுழற்றி வாங்கிக்குவித்ததுதான் இந்த 75 நிறுவனங்களும்.

உலகின் மிகப்பெரிய நகைக்கடை என வருணிக்கப்படும், அமெரிக்காவின் Tiffany & Co வையும் அர்னோ விட்டுவைக்கவில்லை. 16 பில்லியன் அமெரிக்க டொலர்களை அள்ளிவீசினார். Tiffany அவரின் காலில்வந்து விழுந்தது.

போட்டி நிறுவனங்களை வீழ்த்துவது, சிலபல கம்பனிகளை விலைகொடுத்து வாங்குவது என்று வியாபாரத்தைப் பெருக்கும்போது அதில் பல சவால்களும், சிக்கல்களும் கெட்ட பெயரும் வரும் இல்லையா..? இவை எல்லாமே Bernard Arnault க்கும் வந்தது. எல்லாவற்றையும் தைரியத்தோடு Face பண்ணினார்.

தன்னிடம் சொந்தமாக ஊடகம் இருக்கவேண்டும் என நினைத்த அவர், பிரான்சின் பிரபல வணிகப் பத்திரிகையாகிய La Tribune ஐ 150 மில்லியன் யூரோக்கள் கொடுத்து வாங்கினார். ‘இதெல்லாம் மிகவும் அதிகம்’ என்று அவரை எல்லோரும் விமர்சனம் செய்தார்கள். அதற்கேற்றதுபோல Tribune பத்திரிகையால் அவர் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. அதை 2007 ஆண்டில் விற்றுவிட்டு, பிரான்சின் இன்னொரு பிரபல வணிகப் பத்திரிகையாகிய Les Échos வாங்கினார். அதற்கு அர்னோ அள்ளி இறைத்த தொகை 240 மில்லியன் யூரோக்கள் .

இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், Les Échos வை வாங்கும்போது, Le Parisien உம் சேர்ந்துதானே அவருடைய கைக்கு போகும். இரண்டும் ஒரே குழுமம் தானே என்கிறீர்களா..? சந்தேகமே இல்லை. பிரான்சின் நம்பர் வன் நாளிதழாகிய Le Parisien உம் அர்னோ வசம்தான்.

இன்னும் நிறைய ஆச்சரியங்கள் உள்ளன இந்த 74 வயது மனிதரைச் சுற்றி. இன்னொரு பதிவில் அவற்றைப் பார்க்கலாம். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்