Paristamil Navigation Paristamil advert login

'Paris 24' ஒதுக்கப்பட்ட வீசேட பாதைகளால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது.

'Paris 24' ஒதுக்கப்பட்ட வீசேட பாதைகளால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது.

24 ஆடி 2024 புதன் 07:54 | பார்வைகள் : 3019


தலைநகர் பாரிசையும் அதன் வெளி நகரங்களையும் இணைக்கும் சுற்றுவட்டப் பாதையான 'périphérique' மற்றும் வேக வீதிகளான A1, A 4 உட்பட பல வீதிகளின் குறித்த சில பாதைகள் பாரிசில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் தேவை கருதி விசேட பயனாளர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வீதியில் தவறியேனும் பொதுமக்களின் வாகனங்கள் பயணித்தால் விசேட கருவிகள் மூலமும், காவல்துறையினரின் கண்காணிப்பிலும் அவதானிக்கப்பட்டு 135€  தண்டப்பணம்  அறவிடப்படுகிறது.

இதனால் பெரும் வாகன நெரிசல் நாளாந்தம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்துகளும் நடந்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. நெரிசலான நேரத்தில் வாகனம் ஒன்றைக் கடப்பதற்காக ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் பயணித்தால் உடனேயே காவல்துறையினர் வந்துவிடுகின்றனர் இதனை அவதானித்து வாகனம் செலுத்தும் சாரதிகள் அவசரமாக பாதையை மாற்றும் போது விபத்துக்கள் ஏற்படுவதாக வீதிகள் கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது.

இது ஒரு விடுமுறை காலம் எனவே சாதாரண நாட்களை விட அதிகமாக வாகனங்கள் இங்கு பயணிக்கும் காலமும் இதனால். பிரான்ஸ் வாகனங்கள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய வாகனங்களும் நாடுகளைக் கடந்து செல்வதற்காக பிரான்ஸ் பாரிஸ் வீதிகளை பயன்படுத்தி வருவதனால் விபத்துக்கள் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்