Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில்  விமானம் விபத்து.... ஐவர் பலி

நேபாளத்தில்  விமானம் விபத்து.... ஐவர் பலி

24 ஆடி 2024 புதன் 08:10 | பார்வைகள் : 4484


நேபாளத்தில் 19 பேருடன் பயணித்த சவுரியா ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் புறப்படுகையில் ஓடுபாதையில் சறுக்கி விபத்துகுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோதே விமானம் விபத்துள்ளானதாக கூறப்படுகின்றது.

  விமான பயணிகள்  ஐவர்  உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கபப்டும் நிலையில்  உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம்  என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்லதாகவும் கூறப்படுகின்றது.  

காத்மண்டுவில் விமானம் புறப்படபோது வெடித்து சிதறிய பகீர் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

கட்டுபாட்டை இழந்து விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணித்த 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக திகாரிகள் உறுத்திப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை விமான பைலட் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்