"நான் தயாராக இருக்கிறேன், நாங்கள் தயாராக இருக்கிறோம்" Lucie Castets.
24 ஆடி 2024 புதன் 08:25 | பார்வைகள் : 4352
இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான Nouveau Front Populaire (NFP) கட்சியினர் நேற்றைய தினம் புதிய பிரதமராக அறிவித்துள்ள நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியும்,
பாரிஸ் மாநகரசபையின் நிதி இயக்குனரும், இன்றைய அரசு கொண்டுவந்த ஒய்வூதியத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவரும்,சமூக நீதிக்காக உரத்துக் குரல்கொடுத்துவருபவருமாகிய Mme Lucie Castets இன்று 'France Inter ' வானொலி சேவைக்கு வழங்கிய செவ்வியல் ""நான் தயாராக இருக்கிறேன், நாங்கள் தயாராக இருக்கிறோம்: குடியரசுத் தலைவரை அவரது பொறுப்புகளை ஏற்று என்னை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்றைய செவ்வியின் போது அரசு தலைவர் Emmanuel Macron அவர்கள் Mme Lucie Castets நியமனத்தை உடனடியாக ஏற்க முடியாது என்றும்,ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும் வரை நாட்டின் ஸ்திரநிலை கருதி தொடர்ந்தும் Gabriel Attal தலைமையிலான தற்போதைய காவாந்து அரசே தொடர்ந்து பதவியில் நீடிக்கும் எனத் தெரிவித்துள்ள நிலையில் Mme Lucie Castets வேண்டுகோள் இடம் பெற்றுள்ளது.
இடதுசாரிகள் தாங்கள் நியமித்த பிரதமரை ஆட்சி அமைக்க அழைக்காமல் தொடர்ந்தும் அரசதலைவர் மாளிகையிலும், பிரதமர் மாளிகையிலும் ஒட்டிக் கொண்டு இருக்கவே Emmanuel Macron விரும்புகிறார் என்றும், இது ஒரு ஜனநாயக போக்கு அல்ல என்றும், மக்களால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கட்சியே ஆட்சி அமைப்பது முறை என்றும் தெரிவித்து வரும் நிலையில் அரசு தலைவர் மிக மோசமாகவும் அவர்களால் விமர்சிக்கப்பட்ட வருகிறார்.