இரு ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் மீது குற்றச்சாட்டு
24 ஆடி 2024 புதன் 09:05 | பார்வைகள் : 1221
யூரோ கிண்ணம் வென்றதன் பின்னர் நடந்த கொண்டாட்டங்களில் Gibraltar என்பது ஸ்பெயின் ஒருபகுதி என முழக்கமிட்ட இருவர் மீது நான்கு பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நட்சத்திர வீரர்களான Rodri மற்றும் Alvaro Morata ஆகிய இருவரும் தற்போது தடை விதிக்கப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது ஸ்பெயின் அணி.
இந்த நிலையில், இதன் அடுத்த நாள் மாட்ரிட் நகரில் பல ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் முன்னிலையில் Rodri குறித்த Gibraltar என்பது ஸ்பெயின் ஒருபகுதி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து Morata-வும் ரசிகர்களை ஊக்குவித்து அந்த முழக்கத்தை முன்னெடுத்தார். ஜிப்ரால்டர் என்பது ஸ்பெயினின் தெற்கு முனையில் உள்ள ஒரு பகுதியாகும். ஆனால் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பிரித்தானிய ஆட்சியின் கீழ் உள்ளது.
ஜிப்ரால்டர் பகுதியை தங்களிடம் ஒப்படைக்க ஸ்பெயின் காலங்களாக கோரி வருகிறது. இந்த நிலையில் ஜிப்ரால்டர் கால்பந்து அணியின் புகாரை அடுத்து Uefa விசாரணையை தொடங்கியது.
தற்போது Rodri மற்றும் Alvaro Morata ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதில் 4 குற்றச்சாட்டுகள் தீவிரமானது என்றும் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.