முதல் மனிதனையொத்த ரோபோக்கள்! எலான் மஸ்க் அறிவிப்பு

24 ஆடி 2024 புதன் 16:22 | பார்வைகள் : 8437
உலகின் பிரபல பணக்காரான எலான் மஸ்கின் புகழ்பெற்ற மின்னியல் நிறுவனமான டெஸ்லா 2025 ஆண்டு முதல் மனிதனையொத்த ரோபோக்களைப் பயன்படுத்தவுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க், தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2026ஆம் ஆண்டு இவ்வகை ரோபோக்களைச் சந்தையில் விற்பனைக்கு விடும் இலக்குடன், டெஸ்லா நிறுவனம் அவற்றை அடுத்த ஆண்டு முதல் பயன்படுத்தவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இதற்காகக் குறைந்தளவிலான எண்ணிக்கையில் இவ்வகை ரோபோக்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் வருடாந்த நிதியறிக்கை இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அதன் தலைவர் இலோன் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது டெஸ்லா நிறுவனத்தின் பங்குப்பெறுமதியில் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025