கடிதங்களை விநியோகிக்காமல் சேர்ந்து வைத்த தபால் ஊழியர்.. 13,000 கடிதங்கள் மீட்பு!
24 ஆடி 2024 புதன் 18:43 | பார்வைகள் : 9323
தபாலக ஊழியர் ஒருவர் கடந்த ஒருவருடமாக கடிதங்களை விநியோகிக்காமல், சேர்த்து வைத்துள்ளார். 13,000 கடிதங்கள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரான்சின் தென்கிழக்கு மாவட்டமான Isère இல் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள L'Isle-d'Abeau எனும் கிராமத்தின் தபாலகத்தில் பணிபுரியும் குறித்த ஊழியர் அவருக்கு வழங்கப்படும் கடிதங்களில் சிலவற்றை மட்டுமே விநியோகித்துள்ளார். ஏனையவற்றை கட்டித்தூக்கிக்கொண்டு சென்று வீட்டில் மகிழுந்து நிறுத்தும் இடத்தில் போட்டு வைத்துள்ளார்.
இவ்வாறாக கடந்த ஒருவருடமாக செயற்பட்டுள்ளார். வந்துசேரவேண்டிய கடிதங்கள் எதுவும் வீட்டுக்கு வரவில்லை என பல குற்றச்சாட்டுக்கள் எழுந்ததன் பின்னரே சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தற்போது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் Vienna நகர நீதிமன்றத்தில் 2025 ஜனவரியில் முன்னிறுத்தப்பட உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan