Paristamil Navigation Paristamil advert login

ரஷீத் கானின் அதிரடி வீண்... ருத்ர தாண்டவம் ஆடிய பாப் டூ பிளெஸ்ஸிஸ்

ரஷீத் கானின் அதிரடி வீண்... ருத்ர தாண்டவம் ஆடிய பாப் டூ பிளெஸ்ஸிஸ்

25 ஆடி 2024 வியாழன் 07:05 | பார்வைகள் : 3471


MI நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டல்லாஸில் நடந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் MI நியூயார்க் அணிகள் மோதின.

முதலில் ஆடிய MI அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியில் மிரட்டிய ரஷீத் கான் 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் குவித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆரோன் ஹார்டி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

பின்னர் களமிறங்கிய டெக்சாஸ் அணியில் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹார்டி அதிரடி காட்டினார். மறுமுனையில் டேவன் கான்வேயும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெக்சாஸ் அணி 18.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.


கான்வே (Conway) 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும், ஹார்டி (Hardie) 22 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்