Paristamil Navigation Paristamil advert login

Grand Paris Express: இல் து பிரான்ஸ் மக்களுக்கான நற்செய்தி.

Grand Paris Express: இல் து பிரான்ஸ் மக்களுக்கான நற்செய்தி.

1 புரட்டாசி 2023 வெள்ளி 11:28 | பார்வைகள் : 5653


பரிசில் இயங்கும் மெத்ரோ சேவைகளை விரிவாக்கும் திட்டத்தின் பெயர்தான் Grand Paris Express.

தற்போது 1 தொடக்கம் 14 வரையான மெத்ரோக்கள் சேவையில் உள்ளமை நீங்கள் அறிந்ததுதான். இதற்கு மேலதிகமாக 15,16,17,18 ஆகிய 4 புதிய சேவைகள் உருவாக்கப்பட்டு நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதிநவீன முறையில் உருவாக்கப்படும் இந்த மெத்ரோ விரிவாக்கல் திட்டம் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படுவதோடு, இல் து பிரான்ஸ் மாகாணத்தை முழுமையாகத் தொடர்புபடுத்தும் விதமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.

எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் மாகாணத்தில் பரிசுக்கு வெளியே பயணிப்பதென்றால், RER மற்றும் Translien போன்ற தொடரூந்து சேவைகளையே தற்போது பயன்படுத்த முடியும்.

ஆனால் Grand Paris Express திட்டத்தின் மூலம் முன்பைவிட வேகமாகவும் இலகுவாகவும் இல் து பிரான்ஸ் முழுவதும் பயணிக்க முடியும்.

மொத்தமாக 68 புதிய நிலையங்கள் தற்போது துரிதகதியில் உருவாக்கப்பட்டு வருகின்றன. 200 கிலோமீட்டர் நீளமான தொடரூந்துப் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

4 புதிய மெத்ரோ சேவைகளுடன் சேர்த்து தற்போது சேவையில் இருக்கும் 11 மற்றும் 14 ஆகிய மெத்ரோ சேவைகளை விரிவாக்கும் பணியும் இடம்பெற்று வருகிறது.

Châtelet தொடக்கம் Mairie des Lilas வரை சேவையில் இருக்கும் 11 ஆம் இலக்க மெத்ரோ, விரிவாக்கப்பட்டு Noisy-Champs வரை செல்ல இருக்கிறது.

அதேபோல Saint-Lazare தொடக்கம் Olympiades வரை சேவையில் இருக்கும் 14 ஆம் இலக்க மெத்ரோ, மேலும் விரிவாக்கப்பட்டு ஓர்லி விமான நிலையம்வரை செல்ல இருக்கிறது. அத்துடன் மறுமுனையில் Saint-Lazare இருந்து மேலும் விரிவாக்கப்பட்டு Saint-Denis Pleyel வரை செல்ல இருக்கிறது.

2024 ஆம் ஆண்டில் இருந்து கட்டம் கட்டமாக சேவைக்கு வரவுள்ள இந்த புதிய மெத்ரோக்கள், இல் து பிரான்ஸ் மக்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்